"ஈழ மகவை ஒன்றின் வீர அகவை"
Pop
00:00 / 00:00
Lyrics
"ஈழ மகவை ஒன்றின் வீர அகவை"
"வீறு கொண்ட வேங்கை ஒன்று விழித்து நின்றது
கொடிய பெரும் பகைகள் கூட திகைத்து ஒடுங்கிற்று"
நாதனுக்கு ஓர் கவிதை
ஈழ நாதனுக்கு ஒரு கருவிதை
ஆதி நாதன் அவதரிப்போ
குமரவேலன் போர்க்குணமோ
குமரிக் குறிஞ்சி ஆண்ட ஈசனும்
குமரி ஊழி காத்து இலங்காபுரி சேர்த்து:
முல்லை, மருதன் ஆன முருகனும்
செல்வத்தில் செழித்து எழில் ஆட்சி மொழி்ந்து
யாழ் தலைநகரம் ஆண்ட குபேரனும்
சிவனைத் தொழுது வீணைக்கு உருக்கொடுத்து:
இலங்காபுரி ஈசன் ராவணேசுவரனும்
கும்பகரணன். இந்திரன். திருமால்:
ஐந்திரப்பாண்டவரும்
சேர, சோழ, பாண்டியரும்
எல்லாள. சங்கிலிய, பண்டாரவன்னியரும்
ஈழம் ஆண்ட வீர ஓர்மத்தோற்றத்தான்
இனம் கரை சேர்க்க; ஈழம் கறை நீக்க
அறம் காக்க; மறம் மீட்க
வேங்கை குணத்தில்; விவேகம் ஈர்த்து
புத்தனை மிஞ்சும்; நேர்மைத் தர்மம் பூண்டு:
இயேசுவை மெச்சும்; ஈகக் கனல் சுமந்தும்
காந்திக்கும் உயர்மெய்; அகிம்சை புகட்டி
பாரதியின் அக்கினிப் பிளம்பாய்
புரட்சியாளரின் கதிர் கீற்றாய்
எழுச்சியாளர் குரலின் எரிமலை குமுறலாய்
கரிகால்வளவன் அருவ உருகிலே
கரிகாலன்! பிறப்பு எடுத்தான்
கருவிலே உணர்ந்த அவல ஒலி
அவணியில் கால் பதிக்க துடித்தது
தரணியில் ஆய்ந்து அறிந்த ஓங்கு அநீதி
வீறுகொண்டு வெகுண்டெழ வைத்தது
சுதந்திரமாய் உலாவ தடுத்து இருந்த தடை
நெஞ்ச உரம் ஏற்றி எதிர்க்க திணித்தது
வீரம் விளைந்த மூலத் தமிழினத்தின்
இருள் விலக்கும் வீரிய வீச்சாய் நின்றான்
சகல இனத்திற்கும் பிறப்பளித்த தாய்த் தமிழினம்
எல்லா மொழிக்கும் மூலமான தமிழ்த் தாயினம்:
முழு மக்கட்கும் நிலம் கொடுத்த தாய்த்தமிழினம்:
பிறநாடிருந்து தண்டனையால் நாடுகடத்தி
அடைகலம் வந்தவன் கரை வந்துஏறி ஆள...
பூர்வீக நிலத்து இவன் நிம்மதியாய் வாழ:
சிறு நிலம் மீட்கும் நிலையானது ஏன்..
தடுக்குமே! கனகிலும் - தவறி
கேளிர் வீரநெஞ்சம் பொறுக்காதே!
உரித்து உடையான் உரியமை பறிப்பின்
உரத்து உறுமி உறித்து ஆட்கொண்டான்
தடுத்தவனை எதிர்க்கிறான் - என்பது
நியாயமன்று
தற்காப்பது தவறு ஆகா - என்பதே
நியாயம் இன்று
தாய் அறம், அடையாளம்,
பெண், ஆண், வீரம், மானம்
வதம் செய்தவனை
ஓரமம் புனைத்து தடு...
அட்டூழியம் கண்டு வேடிக்கை பார்த்தாய் - எனின்
மனிதம் உள்ள மனிதன் அல்லர்
உயிர் அற்ற மரித்த பிணம்
ஓங்கும் கை ஓங்க
எதிர்வினை ஆற்றுவது இயல்பே
இதையே! செய்தான் அவனே
ஒழுக்க சீலராய்! சமத்துவ சேகரராய்!
இணக்க சங்கமராய்!
ஆய்ந்து அறியும் வள்ளுனராய்!..
இலக்கு அடையும் வல்லவராய்!
உலகநீதி யாத்த உத்தமசீலராய்
திறம் மிகுந்த மாவீரன்
பெண்ணாணுக்கும் உரம் ஏற்றி
இனம் காக்க களம் நாடி
அன்னையாய் வழிமொழி்ந்து
தந்தையாய் வழிநடத்தி
மண்டியிடாத மானமும்
வீழ்ந்து விடாத வீரமும்
மதி கொண்டு புயல் ஆக்கி
விதி கொன்று புதிர் தமிழீழம் வகுத்தவன்
இழப்பை நழுவாது
விதை ஆக்கி; உழுது பயிராக்கி
தோல்வியை வெறுக்காது:
உள் ஈர்தது! உணர்ந்து உரு கொடுத்து
அறுவடையும் செய்தவன்
வெற்றி வாகை பூண்டவன்
தோற்றது யார் என்று அறியோமோ
தமிழ் இனம் காத்து:
மானம். வீரம் ஒருசேர உயர்த்தியவர்
ஒருபோதும் வீழ்வதில்லை
உணராத தமிழரே! வீழுந்தனர்
அவர்கட்கும் புரியாத புதிர் அவன்
தமிழ் ஈழம் ஆண்ட இறுதி வீரத்தமிழன் ஆனான்
முப்படை பூண்ட முதல் மாமன்னன் ஆனான்
களம்பல கண்ட முதல் மூலக்கடவுள் ஆனான்
உலகாண்ட தேவருள்: ஒருவன் ஆனான்
"தணியாது தாகம் விடியாமல்"